தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்

ஓசூர், ஆக.21- ஓசூரில் அறிவியல் அறிஞர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி பேராசிரியர்  நரேந்தர் தபோல்கர் நினைவு நாளில் “ஆக்ஸ்ட்  20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்” மற்றும் இந்திய அரசியலமைப்பின் 51 A (h) பிரிவு – ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை, மனித நேயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறது.

அதன் அடிப்படையில் உறுதி ஏற்பு நிகழ்வு ஒசூர் ராமநாயக்கன் ஏரி மாநகராட்சி பூங்கா அருகில் ஒசூர் புத்தக திருவிழா தலைவர் ஆடிட்டர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன், இளைஞரணி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தியது. மேலும் கலந்கொண்ட அமைப்புகள் ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு.

பகுத்தறிவாளர் கழகம்

திராவிடர் கழகம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,

தமிழ்நாடு கல்வி இயக்கம்

சமூக விஞ்ஞான ஆய்வரங்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்போர் நலச்சங்கம்

இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம்.ஆகிய அமைப்புக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *