தஞ்சாவூர், ஆக.21 தஞ்சை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.8.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடு கள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்கிட வேண்டும் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பதின் அவசியம் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குறித்து உரையாற்றினார்
மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், மாவட்டச்செயலாளர் அ.அருணகிரி, பொதுக்குழு உறுப்பி னர் தீ.வ. ஞானசிகாமணி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.ராமலிங்கம், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் பா.சுதாகர், பூதலூர் ஒன்றிய செயலாளர் அல்லூர் பாலு, திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா அரங்கராசு, வடசேரி கிளைக் கழக தலைவர் ராமசாமி, புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி, கலைச்செல்வன், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் துரை, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், கரந்தை பகுதி செயலாளர் தனபால், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் பாரதிதாசன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.ராமதாஸ் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் தெ.மலர்க்கொடி, மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி, பள்ளி அக்ரஹார பகுதி அமைப்பாளர் பேராசிரியர் ஜோதிபாசு, பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஏழுமலை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, பூதலூர் ஒன்றிய துணைத் தலைவர் புகழேந்தி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாநகர தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை மாநில தலைவர அழகிரிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செய லாளர் நா.இராமகிருஷ்ணன், பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் தே.பொய்யாமொழி, மாவட்ட இளைஞ ரணி செயலாளர் அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் ஆதியோர் கருத்துரை ஆற்றினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மாவட்டத்தில் முடிவுற்ற ‘விடுதலை’ சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
‘‘உலகம் பெரியார்மயம் – பெரியார் உலகமயம்’’ என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை ( செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில், கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவது, மாநகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
செப்டம்பர் 17 அன்று ஒரத்த நாட்டிலும் செப்டம்பர் 20 தஞ்சாவூரிலும் பெரியார் பட ஊர்வலம் நடத்துவது எனவும் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்ற சிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
தலைமைக் கழகத்தால் அறி விக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மறை மலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டத்தை ஆகஸ்ட் 16 திருவையாறில் சிறப்பாக நடந்தது போல் ஆகஸ்ட் 25 அம்மாபேட்டையில் மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டதன.
தஞ்சை மாநகர சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக புதிய கோயில்களை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக நாகை சாலையில் மாநகராட்சி நடு நிலைப்பள்ளி வளாகத்தில் முன்பே உள்ள அரச மரத்தின் கீழ் புதிய கோவில் கட்டும் முயற்சியை கண்டிப்பதோடு மாவட்ட ஆட்சியர் உடனே தடுத்து நிறுத்திட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கழகம் வலியுறுத்துகிறது.