திருச்சி அண்ணா நகர் காவலர் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

திருச்சி, ஆக.21  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இயக்க சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்  திருச்சி நவல்பட்டு அண்ணாநகர், காவலர் குடியிருப்பு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 18.8.2025 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் வரவேற்புரையாற்றினார். பெல் ம.ஆறுமுகம் தலைமை  வகித்தார்.  கூட்டத்தின் தொடக்கத்தில் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களையும், மாணவர்களையும் சிந்திக்க வைத்து அறிவியல் மனப்பான் மையோடு அனைவரும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தினார்.

குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது

தொடர்ந்து பெரியார் பிஞ்சு முத்தமிழ் தந்தை பெரியார் பொன்மொழிகளைக் கூறினார்.  பொறியியல் கல்லூரி மாணவி சு.அ.யாழினி  திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி உரையாற்றினார். கழகப் பேச்சாளர் கோவை வீரமணி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, ‘‘தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் ஆறு ஆண்டுகள்  தலைவர் மற்றும் செயலாளராகப் பணியாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு மாநாட்டிலும் வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஆனால் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து அந்தத் தீர்மானத்தை முறியடித்தனர்.  அதனால்  பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தார்.  தந்தை பெரியாரால் நம்மு டைய சமுதாயம்  உரிமைகளையும், சுயமரியாதை உணர்வையும்  பெற்றது. பெரியாரால்  குலக்கல்வித்திட்டம் ஒழித்துக் கட்டப்பட்டது.  ஜெர்மன் தத்துவ அறிஞர் வால்டர் ரூபன்  தந்தை பெரியாரை வேறு எவருக்கும் ஒப்புவமை சொல்ல முடியாத தலைவர் என்று கூறியுள்ளார்.  தமிழர்கள் அனைவரும் தந்தை பெரியார் பாடுபட்டதன் காரணமாகத்தான் தலைநிமிர்ந்து வாழுகிறோம் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் திரவிடர் கழ கத் தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்,  திருச்சி மாவட்டத்தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மகாமணி, பொதுக்குழு உறுப்பினர் கனகராசு, திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் சங்கிலிமுத்து, காட்டூர் கிளைக்கழகத் தலைவர் காமராஜ், துவாக்குடி நகரத்தலைவர் விடுதலை கிருஷ்ணன், கல்பாக்கம் இராமச்சந்திரன்,   மாவட்ட மகளிரணி செயலாளர் ரெஜினாமேரி, பெல் ஆண்டிராஜ், திருவரங்கம் முருகன், வாழவந்தான் கோட்டை விஜயராகவன், பூலாங்குடி கருணாநிதி, ஸ்டாலின், அண்ணாநகர் கனகராசு, காவலர் குடியிருப்பு அம்மணி அம்மாள், அங்கம்மாள், சித்தார்த்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி, பெல் ராமகிருஷ்ணன், திமுக மோகன், சமயபுரம் அம்பேத்கர், சுமதி அண்ணாநகர், ராசலிங்கம், குழந்தை, ஈசுவரசன், செம்மல் துப்பாக்கித் தொழிற்சாலை தி.அன்பழகன், பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்க ளும், பொதுமக்களும்  திரளாகக்  கலந்து கொண்டனர். நிறைவாக சமத்துவபுரம் பெ.கணேசன் நன்றி கூறினார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *