நம்பியூர், ஆக.21 கோபி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 16.8.2025 அன்று நம்பியூர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரா.கார்த்திக் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையேற்று உரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் பெ.ராஜ மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். நம்பியூர் இளைஞர் அணி பாலகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உரையாற்றியவர்கள் வருமாறு:
மாவட்ட இளைஞரணி தலைவர் அஜித்குமார், திமுக மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என். சி. சண்முகம், பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட செய லாளர் விஜய சங்கர், மாநில மாணவர் கழகத் துணை செயலாளர் த.சிவபாரதி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மா.சூர்யா, சத்தி ஒன்றிய செயலாளர் நாகராஜ், சதுமுகை பழனிசாமி, சின்னச்சாமி, கார்த்தி, மற்றும் நம்பியூர் கழகத் தோழர்கள் கோபால், சந்தோஷ், மாதேஷ், அரி, சஞ்சய், ராசு, தேவராஜ், துளசிமணி, ராதா, கதிரவன், மகளிர் அணி மாவட்டத் தலைவர் ப.திலகவதி, பூங்கொடி, செண்பகம், ராஜேஸ்வரி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று உரை யாற்றினர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன
மாவட்டத்தில் முடிவுற்ற ‘விடுதலை’ சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் கழகத் தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
‘‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம்’’ என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை (செப்.17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில், கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, நகராட்சி, பேரூராட்சி, கிராமப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
செப்டம்பர் 6, 7 ஆகிய நாள்களில் கோபிசெட்டிபாளைம் கழக மாவட்டத்தில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சியில் மாவட்டத்திலிருந்து இளைஞர்கள், மாணவர்களை பங்கேற்கச் செய்வது, பயிற்சி வகுப்பை மிகச் சிறப்பாக எடுத்து உடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது
தலைமைக் கழகத்தால் அறி விக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டத்தை ஆகஸ்ட் 23 கோபிசெட்டிபாளையம் மாவட்டத்தின் சார்பில் கொடிவேரி நால்ரோட்டில் மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் கோபி கழக மாவட்டத்தின் சார்பில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 100 தோழர்கள் உடற்கொடை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.