தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம் கீழப்பாலையூர்

திருவாரூர் மாவட்டம் கீழப்பாலையூர் தீண்டாமையை ஒழித்த தி. க. கிராமம் Left Lane தமிழ் பின்னணியில், தோழர் சந்தோஷ் ரங்கன் தயாரிப்பில், ஆரோக்கிய மதன் காட்சி பதிவில் வெளிவந்த ஆவணப்படம் கண்டேன். கோவிலும், அக்ரஹாரமும் அருகில் இருந்த இந்த கிராமத்து மக்கள் தெருவில் நடக்க, நல்ல ஆடைகள் அணிய, பள்ளியில் படிக்க, குளத்தில் குளிக்க, தண்ணீர் எடுக்க, குளிக்க, முடி வெட்ட, தரிசு நிலத்தில் பயிர் செய்ய, ஆடு மாடு தெருக்களில் ஓட்டி செல்ல.. போன்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, மீறியவர்களுக்கு பல்வேறு தண்டனையும் வழங்கப்பட்ட நிலையில் தந்தை பெரியார் திருவாரூர் மாவட்டம் விடையபுரம் கூட்டத்தில் கடவுள் இல்லை என்ற கொள்கையை முன்வைத்து பேசிய எழுச்சி உரையை இம்மக்கள் கேட்ட பின்னர்தான் பெரிய புரட்சி ஒன்று ஏற்பட்டது.

கருப்பு சட்டை அணிந்து இம்மக்கள் திராவிடர் கழகத்தில் இணைந்த பின்னரே இவர்களுக்கு விடுதலை கிடைத்தது. குடவாசல் பகுதியில் உள்ள 48 கிராமங்களும் ஜாதி அரசியலை விடுத்து, பொது சிந்தனைக்கு மக்கள் மாறியதற்கு தந்தை பெரியாரே காரணம் என்று தெளிவாக எடுத்துரைக்கும் இந்த ஆவண படத்தை Periyar Vision OTT இல் முழுமையாக பாருங்கள்.

– பி.ஆர்.சூடாமணி, திருவாலங்காடு

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!

இணைப்பு :

periyarvision.com

பெரியார் ஒடிடி செய்திகள்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *