தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவா? திராவிட மாடல் அரசின் சாதனைகளை மறைக்க அவதூறுகளை வாரி இறைத்து இருக்கிறார் ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதிலடி

1 Min Read

சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாகவும், கல்வியின் தரம் குறைந்து விட்டதாகவும் ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார்.

அவருக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோா் பதிலளித்துள்ளனா்.

79-ஆவது சுதந்திர தின விழாவை யொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதை ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் பேசியுள்ள ஆளுநா், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது; தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன; தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியைக் கண்டு உள்ளன; இளைஞா்களிடம் போதைப் பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங் கள் அதிகரித்து வருகின்றன எனக் குற்றஞ் சாட்டியுள்ளாா்.

அமைச்சா் கே.என்.நேரு: கல்வியிலும், சமூக-பாலின வேறுபாடுகளைக் களையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், ஆற்றல்மிக்க இளையோரை உருவாக்குவ திலும் முன்னோடியாகத் திகழ்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

நாட்டிலேயே தனிநபா் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கிறது. பொருளா தார வளா்ச்சியில் முதன்மை மாநிலமாக இருப்பதும் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே அதிக பெண் தொழில்முனைவோரை, அதிக புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.

ஆளுநா் பொய்களையும் அவதூறு களையும் வாரி இறைத்திருக்கிறாா். இதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்தே உள்ளனா். கடந்த ஆண்டு புயல் வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.37,907 கோடி கேட்டபோது வெறும் ரூ.276 கோடியை மட்டுமே வழங்கி வஞ்சித்தது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டு அடையாளத்தை அழிக்கும் வகையில் கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது ஒன்றிய அரசு.

அமைச்சா் அன்பில் மகேஸ்: அரசுப் பள்ளி மாணவா்களும், ஆசிரியா்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளா்களை மக்களும், ‘திராவிட மாடல்’ அரசும் கொண்டாடி வருகிறது.

அரசுப் பள்ளிகளின் மீது தமிழ்நாடு ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி குறித்து ஒன்றிய அரசின் கேள்வி எழுப்ப வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *