ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு உடுத்தி களிப்புடன் வாழ்க்கை நடத்துவது இல்லையா? அது போலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா, ஒரு மாகாணம் அலலது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும், பொருளும் எல்லாம் குடும்பப் பொதுச் சொத்து போலவும், எல்லா மக்களுக்கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றித் தனித் தனியாக அவனவன் இஷ்டம் போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து உண்டு உடுத்தி இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான சமதர்மம். சில பேருக்கு இது கசப்பாய்த் தெரிவது ஏன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’