கின்ஷாசா. ஆக. 20- காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு மாகாணத்தில், அய்.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற கூட்டணி ஜனநாயகப் படைக்கும் (ADF), ருவாண்டா ஆதரவுப் படைக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 9 முதல் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில், 52 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அய்.நா. அமைதிக்குழு தெரிவித்துள்ளது.
அய்.நா. அமைதிக்குழு வெளியிட்ட தகவல்படி, ஏ.டி.எப். (ADF) பயங்கரவாதிகள் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மோதல்களால் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.