மண்ணச்சநல்லூர், ஆக. 20- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மறைமலை நகரில் அக்டோபர் 4 அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் இலால்குடி கழக மாவட்டம் மண்ணச் சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில் 17.8.2025 மாலை 6 மணிக்கு சிறப்பாக நடந்தேறியது.
மண்ணச்சநல்லூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமை தாங்க கழக காப்பாளர்கள் ப.ஆல்பர்ட், அரங்கநாயகி மாவட்டத் தலைவர் வால்டேர், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, துணத் தலைவர் ஆசைத்தம்பி, திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செய லாளர் க.பாலச்சந்திரன் அனைவரையும் வர வேற்றார்.
இலால்குடி மாவட்டத் துணத் தலைவர் பெரு வளப்பூர் வெ. சித்தார்த்தன் தொடக்கவுரையாற்றிய கழகச் சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி சிறப்புரை யாற்றினார் அவர் தனது உரையில் தந்தை பெரியார் அவர்கள் தமிழக மக்கள் மானம் அறிவு சுயமரியாதையுடன் வாழ எத்தனை இன்னல் களுக்கிடையே தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் மற்றும் இயக்கத் தலைவர்கள் பன்னீர்செல்வம் சர் பிட்டி தியாகராயர் போன்றவர்கள் எவ்வாறு கடுமையாக பாடுபட்டனர். திராவிட மாடல் ஆட்சி யில் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு நன்மைகள் அடைந்ததை விரிவாக விளக்கி இந்த ஆட்சியை கண்ணிமை போல் காக்க வேண்டிய அவசியத்தை விரிவாக விளக்கி பேசினார்.
சிவசங்கரன், திருப் பைஞ்சீலி முருகேசன், பாச்சூர் ராஜேந்திரன், புள்ளம்பாடி ஒன்றியத் தலைவர் திருநாவுக்கரசு, நகரச் செயலாளர் பொற்செழியன், இலால்குடி ஒன்றியத் தலைவர் பிச்சைமணி, வால்மானபாளையம் பாவேந்தன், பணி நிறைவு பெற்ற மின்வாரியத் தோழர் எம்.செல்வராஜ் மற்றும் பிற பகுதி கழகத் தோழர்கள் பிற கட்சித் தோழர்கள் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
ஆரம்பத்தில் தொழிலாளர் அணித் தோழர் பாச்சூர் அசோகன் இயக்க பாடல்கள் பாடியது பொதுமக்களின் பாராட்டை பெற்றது. இறுதியில் நகரத் தலைவர் மூ.முத்துசாமி வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரையாற்ற கூட்டம் இனிதே முடிவுற்றது.