கரூர், ஆக. 20- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 16.8.2025 அன்று மாலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பரப்புரை கூட்டம் கரூர் வெங்கமேடு பெரியார் பெருந்தொண்டர் க நா. சதாசிவம் திடலில் கரூர் நகர தலைவர் ம. சதாசிவம் தலைமையில் நடைபெற்றன.
கரூர் நகர செயலாளர் ச. ராசா வரவேற்புரை ஆற்றினார். கரூர் மாவட்ட காப்பாளர் வே.ராஜு, மாவட்டத் தலைவர் ஆசிரியர் ப. குமாரசாமி மாவட்டச் செயலாளர் ம. காளிமுத்து , பொதுக்குழு உறுப்பினர் சே. அன்பு, மாநில இளைஞரணி செயலாளர் மா ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை பொறுப்பு வகித்தனர். திராவிடர் கழக பேச்சாளர் தி. என்னரசு பிராட்லா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு நடைபெறும் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துப் பேசினார்.
அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டில் சுயமரியாத இயக்க மாநாடு நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர். மற்றும் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் தோன்றியதைப் பற்றியும், திராவிட மாடல் அரசின் சாதனைகள், கலைஞர் நூற்றாண்டு விழா, நடைபெறும் இந்த காலகட்டத்தில் பிஜேபி ஆர்எஸ்எஸ் போன்ற மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும். தந்தை பெரியாரின் லட்சிய பயணத்தில் பயணிக்க வேண்டும், தமிழ்நாடு மீண்டும் பெரியார் மண் என்பதை வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் திராவிட மாடல் அரசு அமைய உறுதி ஏற்போம் என்று பேசினார்.
கரூர் மாவட்ட துணை செயலாளர் தே. அலெக்ஸ், தமிழன் குமாரசாமி ஏசுதாஸ் தலைவர் கலை இலக்கிய அணி, ஆ.விக்னேஷ் மாவட்ட இளைஞரணி தலைவர், குளித்தலை சந்தானகிருஷ்ணன், நகர இளைஞரணி கி.சுரேஷ், தாந்தோணி தலைவர் பெ இராமலிங்கம், கரூர் ஒன்றிய தலைவர் சு. பழனிசாமி, தாந்தோணி ஒன்றிய செயலாளர் வெங் ககல்பட்டி மா கணேசன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் இரா பெருமாள் கா.வீரமணி துணைத் தலைவர் பெரியசாமி கடவூர் ஒன்றிய செயலா ளர் இரா.கார்த்தி பங்கேற்றனர். பா.கவுதமன் நன்றி உரையாற்றினார்.