இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் பணய கைதிகளை விடுவிக்கவும் சம்மதம்

ஜெருசலேம், ஆக. 20- இஸ்ரேலுக் கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங் கரவாத அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்து வதற்கான 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் தெரிவித்துஉள்ளது. மேலும், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது.

62 ஆயிரம் பேர் பலி

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் இந்தப் போரில் இதுவரை 62,000க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரை நிறுத்த சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்தத் தயார்” என அறிவித்திருந்தார்.

பாலஸ்தீன நாடு
அமைய வேண்டும்

ஆனால், தனி பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என்று ஹமாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், இஸ்ரேல் ராணுவம் கிழக்கு காசாவில் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் காத்துக்கொள்ள புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இச்சூழலில், ஹமாஸ் அமைப்பு தற்போது போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது,

பதற்றமான சூழலில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *