குவைத் சிட்டி, ஆக. 20- மேற்காசிய நாடான குவைத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 160 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கள்ளச்சாராய விற்பனைக் கும்பலைச் சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் நாடான குவைத்தில் மதுபானம் விற்பது, வாங்குவது, வைத்திருப்பது, குடிப்பது ஆகியவை சட்டப்படி குற்றமாகும். இதைப் பயன்படுத்தி, அங்கு கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் நடக்கிறது. சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 40 இந்தியர்கள் உட்பட 160 பேர் உடல்நலம் பாதிக் கப்பட்டனர். இவர்களில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத் தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குவைத் அரசு கள்ளச்சாராயக் கும்பலை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ரகசியச் சோதனைகள் நடத்தப்பட்டு, கள்ளச் சாராயம் தயாரித்து விற்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியர் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களும் அடங் குவர். எனினும், அவர் கள் குறித்த கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.