வாஷிங்டன், ஆக. 20- இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே யான மோதல்கள் முடிவுக்கு வரும் என் றும், நிலைமையை உன் னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அமெ ரிக்கா தலையிடுவது குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
ஆப்ரேசன்
சிந்தூர்
காஷ்மீரின் பஹல் காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி யாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற் பட்டது. பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா சண் டையை நிறுத்தியது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது தலையீட்டால் இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்ததாகக் கூறி வருகிறார். இந்த விவகாரத்தில் அமெரிக் காவின் வெளிப்படையான தலையீடு, இந்தியாவின் வெளியுறவுக் கொள் கையை நீர்த்துப் போகச் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 70 ஆண்டுகளாக, இந் தியா-பாகிஸ்தான் விவ காரங்களில் வெளிநாடுகள் தலையிடாது என்ற கொள்கை கடைப்பிடிக் கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய பாஜக அரசின் பலவீனமே அமெரிக்காவின் இந்தத் தலையீட்டிற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் விமர் சித்துள்ளன.