பேராவூரணி, ஆக.20 கடந்த 18.08 .2025 அன்று மாலை 6 மணி அளவில் பேராவூரணி தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமையிலும், பேராவூ ரணி ஒன்றிய கழக தலைவர் மு.தமிழ்ச்செல்வன், சேது பாவா சத்திரம் ஒன்றிய கழகத் தலைவர் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சி. ஜெகநாதன், ஒன்றிய கழக செயலாளர் பள்ளத்தூர் ஆ. சண்முகவேல், பேராவூரணி நகர கழக தலைவர் சி. சந்திரமோகன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கழக இளைஞர் அணி செயலாளர் சு.வசி வரவேற்க, மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ. வீரையன் தொடக்க உரை ஆற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் சோம. நீலகண்டன் ‘மந்திரம் அல்ல? தந்திரமே!’ என்கின்ற சிறப்பானதொரு அறிவியல் விளக்க நிகழ்ச்சியை செய்து காட்டினார் . தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக தலைமை நிலைய சொற்பொழிவாளர் அப்துல் மஜீது உரைக்குப் பின்னர் கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி சுய மரியாதை இயக்க செயல்பாடு, 1929 ஆம் ஆண்டு முதலாவது சுயமரியாதை இயக்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 60 ஆண்டுகளைக் கடந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அமைச்ச ரவையில் பெரும்பாலான தீர்மானங்கள் சட்டமாக இயற்றப்பட்டு இன்றைய தினம் நடைமுறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதனை விளக்கியும், செங்கல்பட்டு மறைமலை நகரில் அக்டோபர் 4ஆம் நாள் நடைபெறக்கூடிய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு , திராவிடர் கழக மாநில மாநாடு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி மற்றும் சமூக இயக்க தலைவர்கள் திராவிட மாடல் ஆட்சி நாயகர், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரை, நிறைவுறையாற்ற இருக்கின்றார். அனைவரும் மாநாட்டிற்கு வருகை தாருங்கள் என்று அழைப்பு விடுத்தும் ஒரு நூற்றாண்டை கடந்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் இயக்கம் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு சமூக நீதிக்காக பாடுபட்டு வருவதையும் மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கி உரையாற்றினார்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பி னர் பேராவூரணி இரா. நீலகண்டன், பேராவூரணி பொ.மதியழகன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கனக. இராமச்சந்திரன் மற்றும் திமுக மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் ஆ. ஆனந்தராஜ், மாவட்ட அயலக அணி செயலாளர் ஷாஜகான், பெரியாரிய உணர்வாளர்கள்
சித. திருவேங்கடம், அய்ன்ஸ்டீன் அறிவியல் மன்ற பொறுப்பாளர் கலைச்செல்வன், இந்திய தேசிய காங்கிரஸ் சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் முடச்சிக்காடு சேக் இப்ராம்சா, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைத்தலைவர் அப்துல் சலாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் பழக்கடை எசு. எசு.மைதீன், பேராவூரணி ஒன்றிய திமுக துணைச் செயலாளர் செங்கமங்கலம் இளங்கோவன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் முருகேசன், சேது ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சு. சதீஷ்குமார், ஒன்றிய கழக இளைஞரணி செயலாளர் பொ. சந்தோஷ் குமார், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் வை.செல்லையன், இளைஞர் அணி பொறுப்பாளர் சு. பிரபு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.