மும்பை, ஜூன் 6 பன்னாட்டு விமானப் போக்குவரத்து கூட்ட மைப்பு (அய்ஏடிஏ) துணை இயக் குநர் ஜெனரல் கான்ராட் கிளிஃ போர்ட் நேற்று (5.6.2023) கூறிய தாவது: கடந்த 2021ஆ-ம் ஆண்டில் 835 விமானங்களுக்கு ஒரு பயணி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் 2022-இல் 568 விமானங்களுக்கு ஒரு சம்பவமாக அதிகரித்துள்ளது. அதாவது விமான பயணிகளின் அத்துமீறல் 37 சதவீதம் அதிகரித் துள்ளது. விமானப் பணியாளர் களுடன் வாக்குவாதம், இணக்க மின்மை, வார்த்தை அத்துமீறல், போதைப் பொருட்களை பயன் படுத்துதல் ஆகிய சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. ஆனால், உடல் ரீதியான அத்துமீறிய சம்பவங்கள் மிகவும் அரிதான அள விலேயே இருந்தன. உலகளாவிய விமானப் போக்குவரத்தில் 83 சத வீதத்தை கைவசம் வைத்திருக்கும் 300 விமான நிறுவனங்களிடம் நடத் திய ஆய்வில் இது தெரிய வந்தது.
ஒரு பயணியின் அத்துமீறல் என்பது ஏனைய அனைத்து பயணி களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்த லாக மாறி விடுகிறது. சிகரெட் புகைத்தல், சீட் பெல்டை போட மறுத்தல், மது அருந்துதல் போன்ற சம்பவங்கள் விமானங்களில் அதிக அளவில் நடைபெறுகின்றன. இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் பயணிகளை மாண்ட்ரீல் விதி முறை 2014-இன் கீழ் தண்டனைக்கு உட் படுத்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கான்ராட் கிளிஃபோர்ட் தெரிவித்தார்.