புதுச்சேரி, ஆக. 20- புதுச்சேரி மாநிலத்தி லுள்ள அருணா பரி சோதனைக் கூடத்தை மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பநர் துறை மாணவர்கள் மற்றும் துறைத் தலைவர் பேராசிரியர் க. உமாதேவி, பேரா. ச.இராஜேஷ், முனைவர் சி. விஜயலெட்சுமி மற்றும் ஆய்வக தொழில்நுட்பநர் கே.எஸ். அரோமா ஆகியோர் 14.08.2025 அன்று பார்வையிட்டனர்.
அருணா பரிசோத னைக் கூடத்தின் நிர்வாகத் தலைவரும், புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவருமான சிவ.வீரமணி தலைமையில் மாணவர்கள் பரிசோத னைக் கூடத்தை பார்வையிட்டனர். இதில் அதிநவீன தொழில் நுட்ப இயந்திரங்களின் உதவியினால் இரத்த வகை அறிதல், இரத்த சுத்திகரிப்பு, இரத்த மாதிரி சேகரிப்பு, இரத்த அணுக்கள் கணக்கீடு, சிறுநீர் பரிசோதனை, சர்க் கரை நோய் பரிசோதனை, இரத்த புற்றுநோய் அறிதல், வேதிய மூலக்கூறுகள் கணக்கிடுதல், அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்ஸ் கதிர் தொழில்நுட்பம் போன்றவற்றை மாண வர்கள் நேரடியாக கண்டு தங்களின் ஆய்வுத் திறனை மேம்படுத்தினர்.
அருணா பரிசோத னைக் கூடத்தின் செய லாக்க அலுவலர் வீ. அழகரசன், மேலாளர் பாபு, மேற்பார்வையாளர் இளவரசி மற்றும் குழுவினர் பரிசோதனைக் கூடத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மாணவர்களுக்கு தெரிவித்ததுடன் இயந் திரங்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்வதையும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கத் துடன் விளக்கினர். தாமதமில்லாத மருத்துவ சேவைகள்தான் தரமான சிகிச்சையின் முதல் படி என்பதனை விளக்கிய அருணா பரிசோதனைக் கூடத்தினை பார்வையிடும் பெரும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை மற்றும் அருணா பரிசோத னைக்கூடத்தின் தலைவர் சிவ. வீரமணி அவர்களுக்கு மாணவர்கள், தமது மன மார்ந்த நன்றியினைத் தெரி வித்துக் கொண்டனர்.