ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்றுவரும் ‘‘அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சி’’யில் அரிய புத்தகங்களின் காட்சியைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பார்வையிட்டு, அங்கிருந்த அரிய புத்தகங்கள்பற்றி தமது நினைவுகளை, கருத்துகளை நூலக இயக்குநரிடம் தெரிவித்தார். அரிய முயற்சிகளுக்காகப் பாராட்டினார். தமிழர் தலைவர் அவர்களை, ஆர்.பாலகிருஷ்ணன் (அய்.ஏ.எஸ். ஓய்வு), பேராசிரியர் அமுதா பாண்டியன் ஆகியோர் வரவேற்று புத்தகங்களை வழங்கினர். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணனின் ‘‘அகஸ்தியர்; ஒரு மீள் பார்வை’’, அமுதா பாண்டியனின் ‘‘கருநாடக இசை என்னும் தமிழர் இசை’’ ஆகிய நூல்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டார். உடன் நூலக இயக்குநர் சுந்தர்கணேசன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 19.8.2025)
ரோஜா முத்தையா நூலகத்தில் அரிய நூல்கள் காட்சியைப் பார்வையிட்டு ‘‘அகஸ்தியர்; ஒரு மீள் பார்வை’’, ‘‘கருநாடக இசை என்னும் தமிழர் இசை’’ நூல்களைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்!

Leave a Comment