பெரியார் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் பெற்ற மாநில அளவிலான விருதுகள்

வல்லம், ஆக. 20- தமிழ்நாடு அரசின் மாநில நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் நிதியுதவியுடன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 08.08.2025 முதல் 10.08.2025 வரை “இளைஞர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக் கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இரண்டாமாண்டு இயந்திரவியல் மாணவர் செல்வன் எஸ்.சாம் இன்பன்ட் கயிறிழுவைப் போட்டி (டக் ஆஃப் வார்) மற்றும் கபடிப் போட்டிகளில் முதலிடம் வென்றார். ‘பொட்டேட்டோ ரிலே’ மற்றும் ‘ஒருகால் மடக்கி ஓட்டம்’ என்ற விளையாட்டுகளில் இரண் டாமிடம் மற்றும் மூன்றாம் இடம் வென்றார்.

முதலாமாண்டு கணினித்துறை மாணவி பி.சந்தான லெட்சுமி, டக் ஆஃப் வார் மற்றும் ஒருகால் மடக்கி ஒட்டம் (ரிலே) (பெண்கள்) போட்டிகளில் முதலிடம் வென்றார்.  மேலும் கவட்டை (Kavattai) போட்டியில் மூன்றாமிடம் வென் றார்.

முதலாமாண்டு கணினித்துறை மாணவி செல்வி ஜெ.மேரி ஸ்டெல்லா,  ‘கிடு கிடு ரிலே’ – போட்டியில் இரண்டாமிடம் வென்றார்.  மேலும் கவட்டை (Kavattai) மற்றும் ஒருகால் மடக்கி ஓட்டம் (ரிலே) போட்டிகளில் மூன்றாமிடம் பெற்றார்.

விளையாட்டுப் போட் டிகளில் வென்ற மாணவ மாணவிகளை முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி அவர்கள் பாராட்டினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *