இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலிப் பணிகள்

அய்.டி.அய், டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு முடித்தவரா நீங்கள்? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1 ஆண்டு தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி யுள்ளது. தொழிற்பிரிவு, டெக்னீஷியன், பட்டப் படிப்பு தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். மொத்தம் 475 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்தியன் ஆயில் தொழிற்பயிற்சி விவரங்கள்: தொழிற்பிரிவு அப்ரண்டிஸ் – 80, டெக்னீஷியன் அப்ரண்டிஸ் – 95, பட்டப்படிப்பு அப்ரண்டிஸ் – 300, மொத்தம் – 475.

தொழிற்பிரிவு அப்ரண்டிஸ் பிரிவில் பிட்டர், எலெக்ட்ரிஷன், எலெக்ட்ரிக்கல் மெக்கானிக், இன்ஸ்ரூமெண் மெக்கானிக், மெக்கானிஸ்ட், பிட்டர், எலெக்ட்ரிஷன் ஆகிய தொழில்களின் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பிரிவில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேஷன், சிவில், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகள் நிரப்பப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கருநாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொழிற்பயிற்சி இடங்கள் நிரப்பப்படுகிறது.

தகுதிகள்: தொழில் அப்ரண்டிஸ் பிரிவில் உள்ள அந்தந்த தொழிற்பிரிவில் 2 ஆண்டுகள் அய்.டி.அய் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பதவிக்கு அந்தந்த பொறியியல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு அப்ரண்டிஸ் பதவிக்கு பிபிஏ, பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்.  ஆகிய பட்டப்படிப்புகளை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்தவர்கள் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆயில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பு கிறவர்கள் 31.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 24 வயது வரை இருக்கலாம். இதில் வகுப்பு பிரிவினருக்கு ஏற்ப வயது வரம்பு தளர்வு உள்ளது.

தொழிற்பயிற்சி உதவித்தொகை: தொழிற்பயிற்சி சட்ட விதிமுறைக்கு உட்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை

இந்தியன் ஆயில் நிறுவன தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதில் இடம்பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு விடுக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பயிற்சிக்கான நியமனம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பயிற்சியின் மூலம் பணிக்கான திறன்களை வளர்த்துகொள்ளலாம். பணி வாய்ப்புகளுக்கு தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதார்கள் தயாராக வைத்துகொள்ள வேண்டிய ஆவணங்கள்

பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு மற்றும் காசோலை புத்தகம், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு,     கல்வித்தகுதி சான்றிதழ்கள்/ மதிப்பெண் சான்றிதழ்கள், புகைப்படம்.

சான்றிதழ் சரிபார்ப்பின்போது
இருக்க வேண்டிய ஆவணங்கள்

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வகுப்பு பிரிவு சான்றிதழ், செமஸ்டர் மற்றும் டிகிரி சான்றிதழ். மருத்துவ பரிசோதனை சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு கிறவர்கள் இதற்கான அறிவிப்பை https://iocl.com/apprenticeships என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அய்.டி.அய். தகுதி உள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/candidate-login என்ற இணையதளம் மூலமும், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் https://nats.education.gov.in/student_register.php என்ற இணையதளத்தில் மூலமும் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு ஆகஸ்ட் 31ஆம் தேதியின்படி நிர்ணயிக்கப்படுகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *