சென்னை, ஆக.19 கருநாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வரும் நிலையில், ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 20,338 கன அடியாக உள்ளது.
கருநாடக அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அப்போது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற சூழல் உள்ளது.
மேலும், கே.ஆர்.எஸ் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்வரத்து 1 லட்சம் கன அடியை தாண்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையில் உபரி நீா் திறக்கப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், காவிரி ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடுவதால், காவிரி ஆற்றில் குளிக்கவும், பாிசல்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 20,338 கன அடியாக உள்ளது.