மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் நெரிசலின்றி பள்ளிக்கு செல்லும் திட்டத்தை சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, 25 பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காலையில் பள்ளி மாணவர் களை மட்டும் ஏற்றிக் கொண்டு பள்ளி வளாகத்திற்குச் செல்லும் மாநகர பேருந்துகள், மாலையில் அதே வழித்தடத்தில் சென்று அவர்கள் பகுதியில் இறக்கிவிடும். பாராட்டுக்குரிய முன்னெடுப்பை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை மேற்கொண்டுள்ளது.