குத்தாலம், ஆக. 19- செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற வுள்ள சுயமரியாதை இயக்க நுாற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக் கப்பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 18-08-2025 அன்று மாலை நடைபெற்றது.
குத்தாலம் நகரத் தலைவர் சா. ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்டகாப்பாளர் ச. முருகையன் மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் க. கலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கு. இளமாறன் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற செயற் குழு உறுப்பினர் கி. தளபதிராஜ் பொதுக் கூட்ட நோக்கத்தை விளக்கினார்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், துணைத் தலைவர் ஞான.வள்ளுவன், மாவட்ட ப.க. தலைவர் இரெ. செல்லதுரை, மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ப.த. ஆசைத்தம்பி, குத்தாலம் நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வ.கோ.ஜெயராஜ், ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து திராவிடர் கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தோற்றுவித்தது ஏன் என்பது குறித்தும், சுயமரியாதை இயக்க மாநாடுகளில் இயற்றப்பட்டத் தீர்மானங்களே இன்றளவும் ஆட்சியாளர்களின் மக்கள் நலன் சார்ந்த சமூகநீதித் திட்டங்களுக்கு அடித்தளம் அமைப்பவையாக இருக்கின்றன என்பதை விளக்கியும், இந்துத்துவா கொள்கை கொண்ட ஒன்றிய பாஜக ஆட்சியை தீரத்தோடும் சுயமரியாதையோடும் எதிர்த்துப்போராடி சமூக நீதி காக்கும் அரசாகத் திகழும் இன்றைய திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சிதான் வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்கான நியாமான காரணங்களைப் பட்டியலிட்டு பொதுமக்கள் ஆர்வத்தோடு விரும்பிக் கேட்கும் வண்ணம் பேசினர்.
சிறப்புரையாற்றிய திராவிடர் கழக தலைமைக் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கடவுள், மத, ஜாதி மூட பழக்க வழக்கங்களைச் சாடியதோடு, சுயமரியாதை இயக்க வரலாற்றையும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் விளக்கி இந்த ஆட்சி ஏன் நீடிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை மக்கள் மனதில் பதியவைத்தார்.
குத்தாலம் ஒன்றிய அமைப்பாளர் எம். பாலசுந்தரம், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி. முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ் ஒன்றிய செயலாளர் அ. சாமிதுரை, ப.க மாவட்டச் செயலாளர் தங்க.செல்வராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கு. இளஞ்செழியன், குத்தாலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கு.வைத்தியநாதன், திமுக மாவட்ட பிரதிநிதி சாமி.செல்வம், திமுக தோழர்கள் ஜெ.கலையரசன், எஸ்.உத்திராபதி, மணிமாறன், கொக்கூர் மேதாஜி, பெரியார் பிஞ்சுகள் தமிழினி, தமிழ் நிலவன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர். குத்தாலம் ஒன்றிய திக செயலாளர் தி. சபாபதி நன்றி கூறினார்.