போட்டித் தேர்வுகளை எழுதி இராணுவப் பயிற்சிக்குச் சேர்ந்து, பயிற்சியின் போது காயமடைந்த மாணவர்களுக்கு உரிய வகையில் பணி வழங்கிட வேண்டும் என்று அவர்களைக் குறித்த சுயோமோட்டோ வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
நிரந்தரப் பணிக்காகப் பயிற்சி பெற்றவர்களுக்கே இது தான் நிலை என்றால், ஒன்றிய பாஜக அரசால் அறிவிக்கப்பட்டு, ‘அக்னிபாத்’ என்ற பெயரில் தற்காலிகமாக ஆள் சேர்க்கும் திட்டத்தில் ஈடுபடும் அக்னி வீரர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? நீதிமன்றம் அவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளதா?