சென்னை, ஆக. 19- “கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு” என்ற சிறப்பு கருத்தரங்கம் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 486 ஆவது வார நிகழ்வாக 17 -08- 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 07 -00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா கோபால் வர வேற்புரையுடன் அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ. ராமலிங்கம் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தே. குணா பாரதி தலைமையில் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க. இளவரசன் ,மேனாள் செயலாளர் சு. சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் ஆறுமுகம், ஹரிதாஸ், சசிகுமார், கருப்புசாமி, சுமதி மணி, அருள் விழியன், பிச்சைமணி, புஷ்பா, வழக்கறிஞர் பன்னீர்செல்வம் ,வேல் மேஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆவடி மாவட்ட திராவிட கழக மகளிர் அணி தலைவர் சி ஜெயந்தி நன்றி கூறினார்.