தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, ஆக 19 தமிழ்நாடு அரசு, போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு முதற்கட்டமாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, அவர்களின் நிலுவையில் உள்ள ஓய்வூதியம், பணிக்கொடை, விடுப்பு நேர ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நிதிப் பலன்களை வழங்குவதற்காக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஓய்வூழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவு, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிதி ஒதுக்கீடு மூலம், ஊழியர்களின் நலனைப் பேணுவதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும்
12 டிஎஸ்பிகள்
பணியிட மாற்றம்

காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை, ஆக. 19 தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் 12 டிஎஸ்பிகள் (காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் விவரம்

செங்குட்டுவன்: திருப்பூர் நகர் குற்ற ஆவண காப்பக உதவி ஆணையராக இருந்தவர், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ராகவி: சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (சிஅய்டி) டிஎஸ்பியாக இருந்தவர், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

செந்தில்: நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்தவர், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

மணிமேகலை: திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்தவர், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

முனுசாமி: சென்னை பெருநகர மேற்கு பயிற்சி மய்யத்தில் இருந்தவர், சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டார்.

பொன்ராஜ்: சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட டிஎஸ்பியாக இருந்தவர், சென்னை நுங்கம்பாக்கம் உதவி ஆணையராக மாற்றப்பட்டார்.

சுரேஷ்குமார்: சென்னை பொரு ளாதார குற்றப்பிரிவு தலைமையிட டிஎஸ்பியாக இருந்தவர், சென்னை தி.நகர் உதவி ஆணையராக மாற்றப்பட்டார்.

பசுபதி: சென்னை பெருநகர நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணை யராக இருந்தவர், சென்னை செம்பியம் உதவி ஆணையராக மாற்றப்பட்டார்.

மகேந்திரன்: சென்னை பெருநகர குற்ற ஆவண காப்பக உதவி ஆணையராக  இருந்தவர், சென்னை வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக மாற்றப்பட்டார்.

சித்தார்த் சங்கர் ராய்: சென்னை பெருநகர பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் உதவி ஆணையராக இருந்தவர், சென்னை பெருநகர நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையராக மாற்றப்பட்டார்.

முஹேஷ் ஜெயகுமார்: சென்னை செம்பியம் உதவி ஆணையராக இருந்தவர், சென்னை மீனம்பாக்கம் உதவி ஆணையராக மாற்றப்பட்டார்.

ரவீந்திரன்: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலக சமூக ஊடக மய்ய டிஎஸ்பியாக இருந்தவர், சென்னை அயனாவரம் உதவி ஆணையராக மாற்றப்பட்டார்.

இந்த பணியிடமாற்றங்கள் காவல் துறையின் செயல்பாடுகளை மேம் படுத்தவும், நிர்வாகத் திறனை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *