திராவிடர் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு – மாநில மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல், மணிக்கூண்டு அருகில் 16.08.2025 அன்று மாலை 5 மணிக்கு மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. கழக பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் தி.க.செல்வம் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் அ.மாணிக்கம் மற்றும் கழகத் தோழர்கள்.