ஒலக்கூர், ஆக. 19- திண்டிவனம் – ஒலக்கூர் – ஆவணிப்பூரில் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டு விளக்கப் பொதுக் கூட்டம் 16.8.2025 அன்று மாநில இளைஞரணி துணை செயலாளர் தா. தம்பிபிரபாகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் தா. இளம்பரிதி, மாவட்ட காப்பாளர் செ.பரந்தாமன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் நவா. ஏழுமலை, மாவட்ட மகளிர் அணி தலைவர் விஜயலட்சுமி தாஸ், பொதுக்குழு உறுப்பினர் பா. வில்லவன் கோதை, பாஞ்சாலம் கழக தோழர்கள் க.பாசுந்தரம், இரா.விநாயகமூர்த்தி, இராஜராம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட இளைஞரணி செயலாளர் கடவம்பாக்கம் பொ.தேவராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.மாவட்ட துணை செயலாளர் ஏ. பெருமாள், மாவட்ட துணை தலைவர் ச. அன்புக்கரசன் ஆகியோர் துவக்க உரையாற்றினார்
கழக மாநில மகளிரணி பாசறை செயலாளர் பா.மணியம்மை சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது நாங்கள் பேசுகின்ற ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற விடயங்களை தற்பொழுது உள்ள மக்கள் ஏற்றுக் கொள்வீர்கள். தந்தை பெரியார் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு கல்வி வேண்டும், சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும், கணவணை இழந்தவருக்கு மறுவாழ்வு தரவேண்டும் என்று போராடினார் இந்தியாவிலேயே ஆணுக்கு இணையாக பெண்களை சமமாக நடத்த வேண்டும் என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு போராடிய தலைவர் யார் என்று சொன்னால் அது தந்தை பெரியார் ஒரு வர் தான் என்று பேசினார்.
மதிமுக ஒலக்கூர் ஒன்றிய செயலாளரும் ஆவணிப்பூர் தலைவருமான கே. அசோகன் கழக தோழர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார்.நிகழ்ச்சியில் ஒலக்கூர் ஒன்றிய திமுக பெருந்தலைவர் பங்கை ஜி. சொக்கலிங்கம், விசிக வர்த்தக அணி மாநில செயலாளர் தாமியா.மு.பரமசிவம், வி.சி.க மாநில துணை செயலாளர் க.எ.எழில்மலை, விசிக மாவட்ட செயலாளர் மா. மாத்தமிழன், திண்டிவனம் நகரத் தலைவர் உ. பச்சையப்பன் திண்டிவனம் நகர செயலாளர் சு.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணி செயலாளர் மா. குமார், மயிலம் ஒன்றிய தலைவர் இரா. பாவேந்தன், மயிலம் ஒன்றிய மகளிரணி தலைவர் பா. இலட்சுமி, மயிலம் ஒன்றிய மகளிரணி செயலாளர் கஸ்தூரி அன்புக்கரசன், ஒலக்கூர் ஒன்றிய மகளிரணி தலைவர் சாந்தி பெருமாள், நகர இளைஞரணி தலைவர் ஓவியர்.செந்தில், நகர இளைஞரணி துணை தலைவர் கே. பாபு, திமுக அவைத்தலைவர் வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா வேலாயுதம், திமுக கிளை கழக தோழர்கள் ஏ.பி.. குகன்ராஜ், ச. அமிர்தராஜ், என். சத்தியராஜ், விசிக இளைஞரணி தோழர்கள் க.சுகன், ப.சுந்தரராஜன், பெ.சசிகுமார், தினேஷ், சத்தீஷ், பெரியார் பற்றாளர் கஜேந்திரன், மகளிர் அணி தோழியர் நிவேதா, தேன்மொழி, ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி தலைவர் மு. இரமேஷ் நன்றியுரை கூறினார்.