நியூயார்க், ஆக. 19- அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், அதன் கதிர்வீச்சு பாதிப்புகளைத் தாண்டி, உலகளாவிய உணவு உற்பத்தியில் பேரழிவை ஏற்படுத்தும் என பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத் திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இந்தப் போர் விவசாயத்தை கடுமையாகப் பாதித்து, உணவு விநியோகத்தில் நீண்டகால நெருக்கடியை உருவாக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.
அணு ஆயுதப் போரின் பாதிப்புகள்
அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், அதன் அழிவு ஆற்றல் சில கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அழித்து விடும். கதிரியக்கப் பாதிப்புகள் பல கிலோ மீட்டர் தொலைவு வரை மக்களையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும். மேலும், 1945இல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணு ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டபோது ஏற்பட்ட மோசமான விளைவுகளை உலகம் ஏற் கெனவே கண்டுள்ளது.
“அணுசக்தி குளிர்காலம்”
புதிய ஆய்வின்படி, அணு ஆயுத வெடிப்பு களால் வளிமண்டலத்தில் பரவும் புகை மற்றும் தூசு, சூரிய ஒளியை மறைத்து, “அணுசக்தி குளிர்காலம்” (nuclear winter) எனப்படும் நிலையை உருவாக்கும். இதனால், பல ஆண்டுகளுக்கு பயிர் உற்பத்தி முடங்கும். குறிப்பாக, உலகில் அதிகள வில் பயிரிடப்படும் சோளத்தை மய்யமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் சோள உற்பத்தி 87 சத விகிதம் வரை குறையும் என கணித்துள்ளது. இந்த பாதிப்பு, போர் நடைபெறும் இடத்தில் மட்டுமல்லாமல், உலகளவில் உணவு விநி யோகத்தை சீர்குலைக்கும்.
புற ஊதா
கதிர்வீச்சு
கதிர்வீச்சு
புவி வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம், சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களை உறிஞ்சி, பூமியை பாதுகாக்கிறது. ஆனால், அணு ஆயுத வெடிப்புகளால் உருவாகும் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் புகையின் வெப்பம் ஓசோன் படலத்தை அழித்துவிடும். இதனால், புற ஊதா கதிர்வீச்சு பூமியின் மேற்பரப்பில் அதிகரிக்கும், இது தாவரத் திசுக்களை சேதப்படுத்தி, உணவு உற்பத்தியை மேலும் குறைக்கும்.
ஆய்வு முடிவுகள்
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தாவர விஞ்ஞானி யூனிங் ஷி கூறுகையில், “ஆறு வெவ்வேறு அணு ஆயுத சூழல்களை வைத்து, 38,572 இடங்களில் சோள உற்பத்தி குறித்து ஆய்வு செய்தோம். அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், ஆறு முதல் எட்டு ஆண்டுகளில் அதன் பாதிப்பு உச்சத்தை அடையும். இதனால், உலக உணவு உற்பத்தி மற்றும் மக்கள் தொகைக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்” என்றார்.
இந்த ஆய்வு, அணு ஆயுதப் போரின் நீண்ட கால விளைவுகளை உலகுக்கு எச்சரிக்கையாக வெளிப்படுத்துகிறது. உணவு உற்பத்தி முடங் குவதால், உலகளாவிய பசி மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தவிர்க்க முடியாதவையாக மாறும் என ஆய்வாளர்கள் எச் சரிக்கின்றனர்.