யூனான், ஆக 19- சீனா -யூனான் மாநிலத்தின் குன்மிங் நகரில் உள்ள டொங்சுவான் மாவட்ட மருத்துவமனையில், 3 வயது சிறுமி தலையில் குத்திய கத்தியுடன் தனது தாயாரோடு சிகிச்சைக்கு வந்திருந்தார்.
மருத்துவர்கள் அந்தச் சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கத்தியை எடுத்தனர் தற்போது சிறுமி நல முடன் இருப்பதாக மருத் துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி குறித்து அவரது தாயார் கூறும் போது, அடிக்கடி சேட்டை செய்ததால் மிரட்டுவதற்காக “தலையணையின் கீழ் பழக்கத்தியை வைத் திருந்தேன். சிறுமி வேகமாக ஓடிவந்து படுத்தார் அப்போது தலையணை அடியில் இருந்த கத்தி சிறுமி தலையில் குத்திவிட்டது. உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்” என்றும் தெரிவித்தார்.
கூர்மையான பொருட்கள் மற்றும் தீப்பிடிக்கும் பொருட்களை எப்போது குழந்தைகளுக்கு கைக்கு எட்டாதவகையில் வைக்கவேண்டும், இருப்பினும் குழந்தைகளை கத்தி உள்ளிட்டவற்றை வைத்து மிரட்டினால் இது போன்ற விபரீதங்கள் நடைபெறும் என்பதற்கு சீனாவில் நடந்த நிகழ்வு ஒரு பாடமாக அமைந்துள்ளது.