பா.ஜ.க.வை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: டி. ராஜா

சேலம், ஆக.19 ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி. ராஜா கூறினார்.

சேலத்தில் நேற்று (18.8.2025) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் அவா் பேசியதாவது:

கட்சி நூற்றாண்டை கொண் டாடும் வேளையில், அடுத்த அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் நடைபெற உள்ளது. இதற்கான அரசியல் தீா்மானம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீா்மானங்கள் தற்போதைய அரசியல் போக்குகளை ஆழமாக ஆராய்கிறது.

அமெரிக்க அதிபா் டிரம்பின் முதலாளித்துவ கொள்கைகளால் உலக பொருளாதாரம் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாற்றங்களை நமது அரசியல் தீா்மானம் பிரதிபலிக்கிறது.

இலங்கையில் ஓா் இடதுசாரி இயக்கம் ஆட்சியை பிடித்துள்ளது. தமிழா்கள், சிறுபான்மையின மக்க ளின் நலன்கள், ஒன்றிய மீனவா்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தீா்மானம் வலியுறுத்துகிறது.

மேற்கு ஆசியாவில் பாலஸ் தீன மக்கள் நாள்தோறும் கொல்லப் படுகிறார்கள். அங்கு இஸ்ரேலிய ராணுவத்தால் இனப்படுகொலை நடைபெற்று வருகிறது. இப்படி மானுடத்துக்கு எதிராக போரை நடத்தும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணைநிற்கிறது. அதற்கு இந்திய பிரதமா் மோடியும் துணைபோகிறார்.

டாக்டா் அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டம், வயதுவந்த அனை வருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. பீகாரில் வாக்காளா் பட்டியல் மோசடிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. நாளை ஒன்றிய அரசுக்கும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறோம்.

சுதந்திர நாள் உரையில் ஆா்எஸ்எஸ் பணிகளை வெகுவாகப் பாராட்டி மோடி பேசியுள்ளார். இதைவிட மோசமான செயல் வேறு எதுவுமில்லை. பாஜகவும், ஆா்எஸ்எஸ்ஸும் அரசமைப்பு சட்டத்தை மாற்ற துடிக்கின்றன. மதச்சார்பற்ற, சோசலிஸம் என்ற வார்த்தைகளை அரசமைப்பு முகவுரையில் இருந்து அகற்ற வேண்டும் என பாஜக கூறிவருகிறது.

இந்த கருத்தியலை ஆதரிக்கும் பாஜகவை வீழ்த்தவேண்டுமானால், ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும். எனவே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி இயக்கத்தை வலுவான சக்தியாக கட்டமைக்க வேண்டும் என்றார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *