‘வாக்கு திருட்டு’ குற்றஞ்சாட்டிய ராகுல், பிரமாண பத்திரம் அளிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணை யத்தை சமாஜ்வாதி கட்சி விமர்சித்துள்ளது. உ.பி.யில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற அவர், அங்கு வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர் பாக பிரமாண பத்திரம் அளித்தும், இதுவரை ஒருவர் கூட பதவிநீக்கம் செய்யப்படவில்லை என்ற சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினர் டிம்பிள் யாதவ், ராகுலின் குற்றச் சாட்டுகள் உண்மை யானவை, அவர் மன் னிப்பு கேட்க வேண்டிய தில்லை என்றார்.