தி.மு.க. பொருளாளர் டி. ஆர்.பாலு அவர்களின் வாழ்விணையர் – தொழில்துறை அமைச்சர்
டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயார் பா. ரேணுகாதேவி அவர்கள் இன்று (19.8.2025) மறைவுற்றார் என்பதற்கு வருந்துகிறோம். கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். டி.ஆர். பாலு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாராசுரம் வை .இளங்கோவன், பொறியாளர் கரிகாலன், தோழர்கள் சூளைமேடு இராமச்சந்திரன், கோவி.ராகவன், பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு. மோகன்ராஜ், ராமு, அரும்பாக்கம் சா.தாமோதரன், த. மரகதமணி, உடுமலை வடிவேல், பூவரசன், கணேசன், புகழேந்தி ஆகியோர் கழகத்தலைவருடன் சென்று மரியாதை செலுத்தினர். (சென்னை – 19.8.2025)