திருவையாறு, ஆக. 18- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி 8.8.1925 அன்று திருவையாறு பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அய்யா தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு அருகிலும், கண்டியூர் தந்தை பெரியார் சிலைக்கு அருகிலும் திருவையாறு ஒன்றிய. நகர கழகத்தின் சார்பில் திருச்சி. தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில் வேளாண்மை செழித்திட சோழப் பெருவளத்தான் கரிகால்சோழனின் பெருமை சொல்லும் துண்டறிக்கை விநியோகிக் கப்பட்டது.
இந்நிகழ்வில் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட விவசாய அணித் தலைவர் இரா.பாலசுப்பிரமணியன். திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின், அமைப் பாளர் மு.விவேகவிரும்பி, மாவட்ட இ. அணி செயலாளர் க.அன் பழகன், நகரத் தலைவர் ஆ.கவுதமன், கண்டியூர் தோழர் பெரியார்அலி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண் டறிக்கைகளை வழங்கினர்.