‘‘நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. (எனவே வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை) உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை!”
வாக்குத் திருட்டு விவகாரத்தில், “வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களைத் தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?” என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி.