ஓசூர், ஆக. 18- சுயமரியாதை இயக்கம் தோன்றி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அக்டோபர் 4இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுவதையொட்டி தமிழ் நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறுகிறது.
அதில் ஒரு கூட்டமாக ஒசூர் தந்தை பெரியார் சதுக்கத்தில் மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமையில் நடை பெற்றது. கழக பேச்சாளர் அதிரடி அன்பழகன் சுயமரியாதை இயக்கம் கடந்த நூறு ஆண்டுகளில் செய்த சாதனைகளை விளக்கி பேசினார்
.இந் நிகழ்ச்சியில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாநில பொறியாளர் அணி துணைத்தலைவர் வெற்றி ஞானசேகரன், 35 வார்டு மாமன்ற உறுப்பினர் தேவி மாதேஷ், 22 வார்டு வட்ட செயலாளர் ஆறுமுகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம்,தமிழ்தேசகுடியரசு இயக்கம் தமிழரசன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்திய மூர்த்தி, மனித நேய ஜனநாயக கட்சி சர்தார், திராவிடர் கழகம் பொதுக்குழு உறுப்பினர் கண்மணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செல்வி,ஒன்றிய அமைப்பாளர் பூபதி, பாலகிருஷ்ணன், வழக் குரைஞர் வெற்றி, ராணி, நாராயண், மோகன் சிவாஜி, சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அறிவுவழி காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியை அரும்பாக்கம் தாமோதரன் நேரடி ஒளிபரப்பு செய்தார்.