ஒடிசா ரயில் விபத்து : உடலில் எந்த காயமும் இல்லாமல் மரணித்த 101 பேர்கள்

2 Min Read

அரசியல்

பாலசோர்,   ஜூன் 7 ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2.3.2023 அன்று இரவு  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்   விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,100 பேர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் மீட்புப் பணிகளுக்குப் பிறகு, ரயில் பாதை முழு வீச்சில் சீரமைக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங் கியுள்ளது. 

இந்நிலையில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது “விபத்தில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந் துள்ளன. கோரமண்டல் எக்ஸ் பிரஸ் ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 40 உடல்களில் எந்தவித காயமோ அல்லது ரத்தக் கறையோ இல்லை. இவர்கள் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்க வாய்ப் புள்ளது” என்றார்.

 இவர் கூறியதையே விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கை பிரதிபலிக்கிறது. விபத்து குறித்து அரசு ரயில்வே காவல் துறையின் (ஜிஆர்பி) சப்-இன்ஸ்பெக்டர் பப்பு குமார் நாயக் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் “பயணிகள் பலர் காயத்தால் உயிரிழந்தனர். ரயில்கள் மோதிக் கொண்டது அல்லது மின்சாரம் பாய்ந்ததில் இவர்கள் காயம் அடைந்திருக்கலாம்” என கூறப் பட்டுள்ளது. தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதிய பிறகு தண்டவாளத்திற்கு மேல் செல்லும் மின்சார கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என கூறப் படுகிறது. விபத்தில் ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டதிலும் அவை தண்டவாளத்திற்கு மேல் செல்லும் உயரழுத்த மின் கம்பி மீது உரசியிருக்கவும் வாய்ப் புள்ளது என ஓய்வுபெற்ற ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறினார். அடையாள தெரியாத நபர்களின் கவனக்குறைவால் மரணம் நேரிட்டதாக ஜிஆர்பி வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதனிடையே தென்கிழக்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி நேற்று (6.6.2023) கூறும்போது, “விபத்தில் இறந்த வர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை 530-க்கும் மேற்பட்டோருக்கு சுமார் 15.6 கோடி வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு கோர விரும்புவோர் கட்டாக், மிட்னாபூர், புவ னேஸ்வர், பாலசோர் ஆகிய இடங்களில் உள்ள எங்கள் உதவி மய்யங்களை அணுகலாம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *