கிளாஸ்கோ, ஆக. 18- வட அயர்லாந்தைச் சேர்ந்த 97 வயதான கிரேஸ் சேம்பர்ஸ், 250 பூங்காக்களில் நடக்கும் மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்ற அய்ரோப்பாவின் வயதான பூங்கா ஓட்ட வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு நான்கு வாரங்களுக்கு முன்புதான் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 16 பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற்ற 5 கிலோமீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற அவர், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓட்டத்தை நிறைவு செய்ததாக பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கிரேஸ், 2016ஆம் ஆண்டு முதன்முறையாக ‘Parkrun’ என்ற பூங்கா ஓட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். அதன் பின்னர் தொடர்ந்து பல ஓட்டங்களில் கலந்துகொண்டு, பல சாதனைகளை முறியடித்தார்.
இந்த ஓட்டங்களில் பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறிய கிரேஸ், தற்போது தனது இரு நண்பர்களுடன் இணைந்து ஓட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
மின்சாரம் தாக்கிய
பூனையின் உயிரைக் காப்பாற்றிய
தாய்லாந்து இளைஞர்
தாய்லாந்து இளைஞர்
பாங்காக், ஆக. 18- தாய்லாந்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் பிங் பிங் என்பவர், மின்சாரம் பாய்ந்து நினைவிழந்த பூனைக்குச் சரியான முறையில் அவசர உயிர்காப்புச் சிகிச்சை (CPR) அளித்து அதைக் காப்பாற்றியுள்ளார்.
விலங்குநல மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் பிங் பிங், ‘தொங்காம்’ என்ற அந்தப் பூனைக்குச் சிகிச்சை அளிக்கும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்தச் சம்பவ இடத்தில், மற்றொருவர் தவறான முறையில் உயிர்காப்புச் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பிங் பிங் உடனடியாக தலையிட்டு, சரியான முறையில் சிகிச்சையளித்ததன் மூலம் பூனையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பூனை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. செல்லப் பிராணிகளைக் காப்பதும் அவசியம் என்று பல இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து, பிங் பிங்கைப் பாராட்டி வருகின்றனர்.