புவனேஸ்வரம், ஜூன் 7– ஒடிசா ரயில் விபத்தில் மகன் இறந்துவிட்டதை நம்ப மறுத்த தந்தை, ஆம்புலன்ஸில் 230 கிமீ தூரம் பாலசோ ருக்குப் பயணித்து, தற்காலிக பிண வறையில் மயங்கிய நிலையில் இருந்த தன் மகனைக் கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மேற்குவங்கமாநிலம் ஹவுராவில் கடை வைத்திருக்கும் பிஸ்வஜித் கோரமண்டல் ரயிலில் சென்றுள்ளார். ரயில் விபத்தில் சிக்கியது என்ற தகவலை அறிந்ததும் அவரின் தந்தை ஹெலராம் மாலிக் மகனை அலை பேசியில் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது சிறிதே நேரமே பேசிய பிஸ்வஜித் பலவீனமாக பதில் அளித்துள்ளார்.
அதை வைத்து தன் மகன் விபத்தில் காய முற்றாலும் உயிருடன் இருப்பதை உறுதி செய் துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் அன்று இரவே பாலசோருக்குப் புறப்பட்டார். 230 கிமீ தூரம் பயணித்து அங்கு சென்றபின், எந்த மருத்துவமனையிலும் பிஸ்வஜித்தை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர், பஹானாகா உயர்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சவக்கிடங் கிற்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான உடல்கள் மத்தியில் தன் மகன் பிஸ்வஜித் மயக்கம் அடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு பிடித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதனையடுத்து உடனடியாக பிஸ்வஜித் ஆம் புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த பிறகு கொல்கத்தா கொண்டு சென்றார்.அங்கு பிஸ்வஜித்திற்கு கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.