செயற்கை நுண்ணறிவை முழுமையாகப் பயன்படுத்தி வழக்காடுவதை ஏற்க நீதிபதி மறுப்பு

மெல்போர்ன், ஆக.18- ஆஸ்திரேலியாவில் மூத்த வழக்குரைஞர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதன் தரவுகள் உண்மையானது என நம்பி வழக்காடிய போது அவரது வாதம் குழப்பமாக இருப்பதைக் கண்டு நீதிபதி கண் டித்ததால் நிபந்தனை யற்ற மன்னிப்பை கேட்டுக் கொண்டார்.

கிங் கவுன்செல் என்ற அமைப்பை நடத்தும் இந்திய வம்சாவளி ஆஸ்திரேலிய மூத்த வழக்குரைஞர் ரிஷி நத்வானி கொலை வழக்கு தொடர்பாக வாதாடினார். குற்றவாளியின் சார்பில் வாதாடிய அவர் பல்வேறு தீர்ப்புகள் மற்றும் தரவுகளை எடுத்து வைத்தார்.

அதில் பல ஆஸ்தி ரேலிய சட்டங்களுக்குள் வராதவை மற்றும் கற் பனையான தகவல்களாக இருந்தது அவர் தனது வாதத்திற்காக செயற்கை நுண்ணறிவை முழுமையாக பயன்படுத்தி தரவுகளை வாதத்திற்காக எடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவரது வாதம் மற்றும் தீர்ப்புகள் அனைத்தும் குழப்பமாகவும், உண் மைக்கு மாறாகவும் இருப்பதால் நீதிபதிகள் கடும் கோபமடைந்தனர்.

நீதிமன்றத்தின் நேரம் என்பது மிகவும் முக்கியமானது ஆனால் மூத்த வழக்குரைஞர் இவ்வாறு கற்பனையான வாதத்தை வைப்பது ஏன் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் நான் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்த வாததிற்கு வந்துள்ளேன். என்னால் தவறு நேர்ந்து விட்டது., என் மீது நீதிமன்றம் எந்த நட வடிக்கை எடுத்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறி நிபந்தனையற்ற மன் னிப்பும் கேட்டுள்ளார்.

அவர் செய்த தவறு களால் தீர்ப்பளிப்பதில் 24 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

நீதிபதியின் உதவியா ளர்கள் தவறுகளைக் கண்டறிந்தபோதுதான் நடந்தவை பற்றி அனை வருக்கும் தெரியவந்தது.

செயற்கை நுண்ணறி வைப் பயன்படுத்தும்போது அது கொடுத்த தகவல் கள் சரியாக உள்ளதா இல் லையா என்று சரிபார்க்க வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார்.

இதற்கு முன் அமெரிக் காவில் செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பில்லாமல் பயன்படுத்தியதால் இரு வழக்குரைஞர்களுக்கு 5,000 டாலர்   அபராதம் விதிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *