சென்னை, ஆக. 18- தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, 2025 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ‘தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம்-2030’ திட்டத்தை செயல்படுத்த, ₹500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், செமிகண்டக்டர்கள் வடிவமைப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, சிறிய அளவிலான சிப் உற்பத்தி, இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி உள்ளிட்ட 5 முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த முன்னெடுப்பு, தமிழ்நாட்டை மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் ஒரு முக்கிய மய்யமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.