முதலமைச்சர் தொகுதியில் ஒரே வீட்டில்
30 வாக்காளர்களா? உண்மை என்ன?
30 வாக்காளர்களா? உண்மை என்ன?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் கூறியது பொய்யான தகவல் என TN Fact Check விளக்கம் அளித்துள்ளது. அவர் கூறிய ஆண்டாள் அவென்யூ எண் 11 என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு எனவும், 30 வாக்காளர்கள் வெவேறு வீடுகளில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு முஸ்லிம் மட்டுமல்ல, அனைத்து மதத்தினரும் வசிப்பதாகவும் கூறியுள்ளது.
என்னுடைய முதல் எதிரி ஜாதி: கமல்ஹாசன்
தன்னுடைய ஜாதியை சொல்லி பலர் கிண்டல் செய்திருப்ப தாகவும், ஆகையால் தன்னுடைய முதல் எதிரி ஜாதி தான் என கமல்ஹாசன் எம்.பி., தெரிவித்துள்ளார். திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்தும் தலைவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள், அவர்கள் களத்தில் இருக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பிறப்பால் நாம் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்றார்.
தமிழ்நாடு பற்றிய இந்த தகவல்கள்
99% இந்தியர்களுக்கு தெரியாது
99% இந்தியர்களுக்கு தெரியாது
l இந்தியாவில் உடலுறுப்புக் கொடையில் தமிழ்நாடு முதலிடம்.
l அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு.
l அதிக தொழிற்சாலைகள் இருக்கும் இடம் தமிழ்நாடு (39,000+).
l இந்தியாவுக்கான 80% பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகின்றன.
l இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்(ஸ்பெஸர் பிளாசா), முதல் உயிரியல் பூங்கா (அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா) முதல் பெரிய அணுமின் நிலையம் (கூடங்குளம்) தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.