சேத்தியாதோப்பு, ஆக. 17- சிதம்பரம் மாவட்டம் சேத்தியா தோப்பில் 16.08.25.மாலை 6.00 மணிக்கு தொடங்கி இரவு 9.00 மணிக்கு வெகு சிறப்பாக நடந்தது.
பொதுக்குழு உறுப்பினர் பா.ராஜசேகர் தலைமையேற்றார். இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் அன்பு.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர் மழவை.பெரியார்தாசன், மாவட்ட இனை செயலாளர் முரு கன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
கழக பேச்சாளர் மு.இளமாறன் யாழ்திலீபன் மற்றும் ப.க.தலைவர் நெடுமாறன் ப.க.செயலாளர் செங்குட்டுவன் சிறப்புரையாற்றினர்.
இளைஞரணி பஞ்சநாதன், அல்லூர் ஜெயபால், கொழை, ராஜசேகரன், பெரியண்ணசாமி, பெரியார் தொண்டர் சூசை, செல்வரத்தினம், மகளிரணி சுமதி பெரியார்தாசன், இளமதி, திலீபன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.