தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு

1 Min Read

சென்னை, ஆக.17- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு என்ன, ஊதியம் எவ்வளவு?, எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பபடுகிறது.

பணியிடங்கள் விவரம்

அந்த வகையில் தற்போது புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, கல்வித் தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

புரொபேஷனரி அதிகாரி (Selected as a Senior Customer Service Executive (SCSE). மொத்தம் எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த பணியிடத்திற்கான கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயம்.

வயது வரம்பு

யுஜி டிகிரி முடித்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *