இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 200 காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28 தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் தாய்மொழி தகுதித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20.
வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்கு
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை ஸ்டேட் பாங்கு
(எஸ்.பி.அய்.) உயர்த்தியுள்ளது. இதுவரை, 7.50% – 8.45% ஆக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.50% – 8.70% என மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஆக.1 முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த வட்டி விகித உயர்வு ஏற்கெனவே கடன் வாங்கியவர்களுக்கு பொருந்தாது எனவும், புதிதாக கடன் பெறுவோர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.