‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று ஆளுநர் ஆர்.என் ரவி பேசியிருக்கிறாரே! வேற்றுமை என்பதில் மதங்கள் வருமா? என்பதைத் தெரிவித்தால் நல்லது.
அது ஒரு புறம் இருக்கட்டும்; ஒரே மதமான ஹிந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஜாதிகள் வேற்றுமை குழியில் விழுந்து கிடக்கின்றனவே; அவற்றில் என்ன ஒற்றுமை வாழ்கிறது என்பதையும் ஆளுநர் ரவி தெரிவித்தால் நல்லது.
ஊரை ஏமாற்றும் அவரது பேச்சைக் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள்.