ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1: இயக்கத்தில் இருக்கும் மூத்த பெரியார் தொண்டர்கள் மறைவுறும்போது தங்களின் மனநிலை எப்படி இருக்கும்?

– பா.முகிலன், சென்னை

பதில் 1: வெளியிடாமல் – எனது ‘கொடுமையான துயரத்தை’ அடக்கிக் கொண்டு – அவர்களை வழியனுப்புகிறேன்.

குருதி உறவுகளைவிட கொள்கை உறவுகள் – பல ஆண்டுகள் எனது லட்சியப் பயணத்தில் ஒன்றாகக் களமாடிய வீரர், வீராங்கனைகளின் – பயன் கருதாது வாழ்ந்த லட்சியத் தொண்டர்களின் – தோழர்களின் இழப்பை மறக்க – துன்பத்தை துறக்க – பல நாள் ஆகிறது என்பதே உண்மை.

என்றாலும், இயற்கை வழியை ஏற்பதும், விட்ட பணியைத் தொடர்வதும் அவர்களை மதிக்கின்ற – போற்றுகின்ற மற்றொரு ஆறுதலாகும் – நமக்கு நாமே!

கேள்வி 2: பணமதிப்பிழப்பு அறிவித்த (8.11.2016) மோடி எனக்கு 50 நாள்கள் கொடுங்கள். அதன் பிறகு நீங்கள் சிரமப்பட்டால் என்னை முச்சந்தியில் வைத்து தண்டனை கொடுங்கள் என்றாரே?

– வே.மாரிமுத்து, வேலூர்

பதில் 2: 2024 பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டு மூலம் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். அதுவரை ஒவ்வொரு நாளும் உங்களைப் போன்றவர்கள் இதுபோன்ற செய்திகளை – பழையவைகளை – வாக்காளர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருங்கள்; காரணம் பொது மக்களுக்கு மறதி அதிகம். (றிuதீறீவீநீ னீமீனீஷீக்ஷீஹ் வீs ஸ்மீக்ஷீஹ் ஷிலீஷீக்ஷீt என்பது ஒரு முதுமொழி)

கேள்வி 3: ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்ன காரணத்திற்காக ஊர்வலம் செல்ல அனுமதி கேட்கிறார்கள்?

– க.ஆறுமுகம், மதுரை

பதில் 3: மக்களையும் கொள்கை எதிரிகளையும் அச்சுறுத்திட, அமைதிப் பூங்காவான தமிழ் நாட்டை அமளிக் காடாக்கிட அஸ்திவாரம் போடவே!

கேள்வி 4: ஆவின் நிறுவனம் தொடர்ந்து குறி வைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறதே?

– வா.பார்த்தசாரதி, பொற்பந்தல்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 4: குற்றம் சுமத்த வேறு அதிக சரக்கு கிட்டாததாலேயே இருக்கலாம்! முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் ஊழலை சிறிதாகக் காட்டவும்கூட இது ஓர் உத்தியாக இருக்கலாம்!

கேள்வி 5: “கல்வியும், மருத்துவமும் திராவிட ஆட்சியின் இரு கண்கள்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளாரே? அப்படி என்றால் பாஜக ஆளும் மாநிலங்கள்?

– ம.நீலமேகம், திண்டிவனம்

பதில் 5: பழுதடைந்த பார்வைக்காகவே ‘மனுமுறை’ தவறாது ஆட்சி செலுத்துகிறார்கள்.

கேள்வி 6: பீகார் ஜாதிவாரிக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் பொருளாதார ரீதியிலான அடிப்படையிலும்கூட இட ஒதுக்கீடு எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. பிரிவிற்குத்தான் அதிகம் கொடுக்க வேண்டியிருக்குமே?

– ஆ.யாப்புமொழி, தஞ்சை

பதில் 6: உண்மை அதுதான். மனுதர்மப்படி சூத்திரன் பொருள் சம்பாதித்தால்கூட அது அவனுக்கு உரியதல்ல; அடித்தும் பிடுங்கிக் கொள்ளலாம் என்பதால் என்றும் ஏழைகள்தானே அவர்கள்! அதனால் உங்கள் கருத்து உண்மைதான்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 7: 60 மாணவிகள் தலைமையாசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டமாணவிகள் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமருக்கு புகார் மனு கொடுத்த அவலம் அரியானா மாநிலத்தில். ஆனால் இதை ஊடகங்கள் சாதாரணமாக கடந்து செல்கின்றனவே?

– க.காளிதாசன், காஞ்சி

பதில் 7: பலே பலே ‘குஜராத் மாடல்’. “சாப்கா விகாஸ்” ஆட்சியாளர்களின் சாதனை!

கேள்வி 8: தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் முக்கிய தலைவர்கள் தொடர்பான இடங்களில் வாரக்கணக்கில் அமலாக்கத்துறை சோதனை – தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்க்கிறதே?

– மா.சாக்கியமுனி, ஈரோடு

பதில் 8: தோல்வி பயம்; மக்கள் ஆதரவு தங்களுக்கு இல்லையே என்ற எரிச்சல்தான் அடிப்படை நோக்கம்!

கேள்வி 9: பங்களாதேஷ், மியன்மாரிலிருந்து தமிழ்நாடு வந்து தொழில்நகரங்களில் வேலை செய்கின்றனர். தேசிய புலனாய்வு முகமை வேடிக்கை பார்ப்பது ஏன்?

– நா.மாயன், செங்கல்பட்டு

பதில் 9: ஏதோ இப்போதுதான் சில செய்திகள் வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 10: தேசிய அளவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் என்கிறது தகவல். தமிழ்நாடு ஆளுநர், மேனாள் காவல்துறை அதிகாரி, மேனாள் முதலமைச்சர் ஆகியோர் இதற்கு மாறாக சொல்கிறார்களே ஏன்?

– எஸ்.நல்லபெருமாள், வடசேரி

பதில் 10: எப்போதும் உண்மை பேசியே பழக்கம் இல்லாதவர்களால் எப்படி இப்போது மட்டும் உண்மை பேச முடியும்? அவர்களது வழமையான பழைமை. விட்டுத் தள்ளுங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *