16.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுத்திட, அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது தான் ஒரே தீர்வு. இதற்கான முன் முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தக்க தருணம் தற்போது வந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர நாள் உரையில் கூறினார்.
* நாடு சுதந்திர நாளாகக் கொண்டாடும் வேளையில், பீகார் மக்கள் தங்கள் ஓட்டுரிமைக்கு போராடி வருகிறார்கள் என தேஜஸ்வி பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆர்.எஸ்.எஸ்.சை புகழ்ந்து பேசியதன் மூலம் தியாகிகளின் உணர்வை மோடி அவமதித்து விட்டார்: ‘சுதந்திரப் போராட்டத்திற்கு அவமானம், வெட்கக்கேடு’ என எதிர்க்கட்சிகள் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத்தில் ‘உயர் ஜாதி’யினர் போல் மீசை வைத்த தாழ்த்தப்பட்ட இளைஞர், மாமனார் கொடூரமாக தாக்கப்பட்டனர்; 5 குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.
* தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சுதந்திர நாள் உரையில் 42 சதவீத ஓபிசி இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்க ஒன்றிய அரசு விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தல்.
தி இந்து:
* தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தப் பயிற்சி எவ்வளவு கடினத்தை உள்ளடக்கியதாக உள்ளது? என்பது குறித்து, அய்ந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, பெரும்பாலான வாக்காளர்களுக்கு SIR இன் ஆவணத் தேவைகள் மிகவும் கடினமானவை என்பதைக் காட்டுகிறது; இந்தப் பயிற்சி வாக்காளர் விலக்குக்கான அதிக சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் கண்டுபிடிப்பு.
* மோடி அரசின் பெட்ரோலியம் துறை வெளியிட்ட சுதந்திர நாள் சுவரொட்டியில், சாவர்க்கர், காந்தி படத்தை இணைத்து வெளியீடு, நேரு, பட்டேல் படங்கள் இல்லை. வரலாற்றை “சிதைத்து” “துரோகிகளை” ஹீரோக்களாக்கும் மற்றொரு முயற்சி இது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் கடும் கண்டனம்.
* அண்ணல் காந்தியாரின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை மோடி அரசு மகிமைப் படுத்துவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.
– குடந்தை கருணா