திருச்சி, ஆக. 16- அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 13.08.2025 மற்றும் 14.08.2025 ஆகிய இரண்டு நாட்கள், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், 14, 16 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளப் போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கு பெற்றனர்.
உயரம் தாண்டுதல்
இதில் பத்தாம் வகுப்பு மாணவிகள் எஸ்.பி.ரிதன்யா உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், ஏ.மெஹதாஜ் மூன்றாம் இடத்தோடு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பத்தாம் வகுப்பு மாணவி எஸ்.பிரியங்கா கோலூன்றித் தாண்டுதல் போட்டியில் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும் வென்றார்.
தொடரோட்டப் போட்டி
400 மீட்டர் தொடரோட்டப் போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் எஸ்.ஹரிஹரன், ஏ.பிரஜன்,கே.சிரஞ்சீவி மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர். கே.சிறீ.சஞ்சய் ராம் ஆகியோரின் அணி மூன்றாம் இடத்தோடு வெண்கலப் பதக்கமும் வென்றது.
தடை தாண்டு ஓடும் போட்டி
எட்டாம் வகுப்பு மாணவர்கள் எஸ்.ஹரிஹரன் 80மீட்டர் தடை தாண்டு ஓடும் போட்டியில் இரண்டாம் இடத்தோடு வெள்ளிப் பதக்கமும் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் இடமும் வெண்கலப் பதக்கமும் மாணவி எஸ்.தீபிகா உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடத்தோடு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாண வர்கள் ஆர்.கோபிநாத் மற்றும் பி.மனோபாலா ஆகியோர் முறையே 110 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் இரண்டாம் இடமும் வெள்ளிப் பதக்கமும், மும்முறை தடை தாண்டி ஓடும் போட்டியில் மூன்றாம் இடத்தோடு வெண்கலப் பதக்கமும் வென்று அளப்பரிய சாதனைகள் படைத்து பதக்கங்களைக் குவித்துள்ளனர்.
தடகளப் போட்டி
இதுமட்டுமின்றி மாணவர்கள் எஸ்.ஹரிஹரன், ஆர்.கோபிநாத்,எஸ்.பி.ரிதன்யா மற்றும் எஸ்.பிரியங்கா ஆகியோர் வருகின்ற 18.08.2025 மற்றும் 19.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்று பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை மாணவர்கள், அவர்களுக்குப் பயிற்சியளித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன்.என்.கோகுல் மற்றும் எஸ்.சவுமியா ஆகியோரைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.