தஞ்சை, ஆக. 16- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழிகாட்டுதலின்படி பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை நடத்தும் கழகத் தோழர்களுக்கான தொலைக்காட்சி சமூக ஊடகப் பயிற்சிப் பட்டறை தஞ்சாவூர் ஞானம்நகர் அறிவுச்சுடர் வலைக்காட்சியகத்தில் 2025 ஆகஸ்ட் 15,16,17 நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
15-08-2025 வெள்ளி காலை 9 மணிக்கு தொடங் கிய வலைக்காட்சி சமூக ஊடகப் பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரை யாற்றினார் மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகரத் தலைவர் செ. தமிழ்ச் செல்வன், மாநகர செயலா ளர் இரா.வீரகுமார் ஆகி யோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
பகுத்தறிவாளர்கழக ஊடகத்துறை மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி அனைவரையும் வரவேற்று நோக்க உரையாற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் முனைவர் ந.எழிலரசன் மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நிரல் பட்டியலை விளக்கி நோக்கவுரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்கள் சி.ரமேஷ், புதுச்சேரி ஆடிட்டர் ரஞ்சித்குமார், பேராசிரியர் கை.மு.அறிவுச் செல்வன், உடுமலை வடிவேல், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, சேலம் மாவட்ட செயலாளர் பூபதி, தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவு தாசன், மேனாள் மாவட்ட தலைவர் ந.காமராஜ் ஆகி யோர் உரையாற்றினர்.
வலைக்காட்சி சமூக ஊடகப் பயிற்சியை தொடங்கி வைத்து திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் காணொலி பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு 5 புதிய நபர்களை உருவாக்க வேண்டும்.
92 வயதிலும் நமது தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு அவற்றை செயல்படுத்த கூடியவராக திகழ்கிறார் அறிவியல் தொழில்நுட்பத்தை உடனே பற்றிக் கொள் வதில் தமிழர் தலைவர் ஆசிரியரே நமக்கு வழிகாட்டி அனைவரும் பின்பற்றுவோம் தொலைக்காட்சி சமூக ஊடகத்துறையில் பெரியாரின் கருத்துகளை பரப்புவோம் என தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக் குமார் புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் வெ.துரை, தஞ்சை மாநகர விடுதலை வாசகர்வட்ட செயலாளர் ஏ.வி.என். குணசேகரன்,வேப்பூர் இளங்கோ, அ.பெரியார் செல்வன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங் கேற்று நிகழ்ச்சிக்கு உதவி புரிந்து வருகின்றனர்
இறுதியாக மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ் நன்றி கூறினார்.
11 மணி முதல் காணொலி பயிற்சி வகுப்புகள் தொடங்கின மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.