உக்ரைன் போர் நிறுத்தம் டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை

1 Min Read

அலாஸ்கா, ஆக. 16- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

டிரம்ப்-புதின் சந்திப்பு

அமெரிக்க அதிபராகப் பொறுப் பேற்றது முதல், உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வருகிறார். இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக டிரம்ப்-புதின் சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்கரேஜ் நகரில் உள்ள எல்மென்டர்ப் ரிச்சர்ட்ன் கூட்டு ராணுவ படைத் தளத்தில் நடந்தது. இவர்கள் பேச்சு வார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ப தற்காக புதின், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அலாஸ்காவுக்கு தனி விமானத்தில் வந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப் அவரை நேரில் சென்று கைகுலுக்கி வரவேற்றார்.

பேச்சுவார்த்தையின் முடிவுகள்

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, செய்தியாளர்களை இருவரும் கூட்டாகச் சந்தித்தனர். அப் போது, டிரம்ப் கூறுகையில், “ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருந்த போதிலும், இந்த பேச்சுவார்த்தை ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது,” என்றார்.

புதின் கூறுகையில், “எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாகப் பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது. இந்தப் பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியைக் கொண்டுவரும் என நம்புகிறேன். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா  – ரஷ்யா இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் மாஸ்கோவில் நடைபெறும் என்றும் புதின் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *